33
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு, வழக்குச் செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவரை, கட்சியின் மத்திய குழுத் தீர்மானம் ஏதுமின்றி தன்னிச்சையாகப் பதவியிலிருந்து நீக்கியதாக சுமந்திரனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, சிவஞானம் மற்றும் சுமந்திரன் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகள் தவறானவை என மன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதற்காகவே இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவு விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கினை வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்தக் கட்டளைக்கு எதிராகத் தான் மேன்முறையீடு செய்யவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
#Jaffna #CourtVerdict #ITAK #Sumandiran #CVKSivagnanam #NorthernSriLanka #JaffnaNews #LegalUpdate #TamilPolitics
