ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். அத்துடன், இரு நாடுகளினதும் புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘பாரத் இனோவேட்ஸ்’ (Bharat Innovates) நிகழ்வையும் இரு தலைவர்களும் […]
