இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்புகள், மீனவர்களின் நலன் குறித்த பல்வேறு துறைகள் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.…

கோவையில் மக்களை அச்சுறுத்திவந்த ‘ரோலக்ஸ்’ காட்டு யானை பிடிபட்டது | Wild Elephant Rolex, forest department nabs him with the help of Kumki Elephant

கோவை: கோவை அருகே மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் இன்று அதிகாலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமப் பகுதிகளில் யானைகள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு | Cancel Petition for Bail Permitted Persons who Arrested Armstrong Murder Case

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலையில் பெரம்பூரில் உள்ள…

இந்திய வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு தடையாக அமையாது- RBI ஆளுநர்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக அமையாது என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தில் பல…

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம் | Tents for passengers at Egmore railway station to reduce Diwali crowd

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தில் இருந்து தமிழகத்தின் மத்​திய, தென் மாவட்​டங்​களுக்​கும், இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்​களுக்​கும் 50-க்​கும் மேற்பட்ட…

கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் விடுவிப்பு: நீதிமன்றம் உத்தரவு | TVK cadres released: Court

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.…

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்!

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த…

தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான மேம்​பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்​னை, அண்ணா சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை, மேம்​பாலம்…

ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: மீன் ஏற்றுமதி வா்த்தகத்தில் ரூ.10 கோடி இழப்பு! | Rameswaram Fishermen Continue 4th Day of Strike Over Sri Lanka Arrests

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித்…

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் எச்சரிக்கைகளை மீறி ஊடுருவ முயன்ற சந்தேகநபர்களை தடுக்கும் முயற்சிகளில்…