நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை 80 மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து, விசாரணைகள் நடத்தப்படுவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று -08- கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு…

கொழும்பில் விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்தார்.    குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன. …

பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம் – மனோ கணேசன்

பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று (8) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர்…

யாழ். பல்கலையில் இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

70   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து கொண்டார். கலைப்பீடாதிபதி பேராசிரியர்…

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் – நாமல்

ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில்…

ஹுங்கம இரட்டை கொலை – வீட்டு உரிமையாளரிடம் பெறப்பட்ட வாக்குமூலம்!

ஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே குறித்த…

காஸா ஆதரவு போராட்டத்தில், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய குட்டி உரை (வீடியோ)

காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தம்  வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தும் இன்று -8- சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை. https://www.facebook.com/share/v/1JWw1zSLAM/ நன்றி

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு – அவசியமான தலையீடுகள் அரசாங்கம் மேற்கொள்ளும்

கல்வித் துறையில் காணப்படும் சம்பள முரண்பாடு தொடர்பாக எதிர்காலத்தில் கட்டமைப்பு ரீதியான அரசாங்கமொன்றாக அவசியமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி கட்டமைப்பில் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மேற்கொள்ளும்…

யஹ்யா சின்வாரின் உடலை கோரும் ஹமாஸ்

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை விடுவிக்க வேண்டுமென அந்த இயக்கம் கோரியுள்ளது. சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த  யஹ்யா சின்வாரின் உடலை கைப்பற்றி இஸ்ரேல்  எடுத்துச் சென்றது. இஸ்ரேல் – ஹமாஸ் இன்று 3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தநிலையில்…

பன்றி காய்ச்சல் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு!

அண்மைய காலங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 1992…