இப்போது தேர்தல் நடந்தாலும் நாம் வெல்வோம்

NPP அரசின் ஐந்து ஆண்டுக் காலப் பதவிக்காலத்தில் இதுவரை கடந்துள்ளது சுமார் ஒரு ஆண்டரை மட்டுமே என்றாலும், தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே நிறைவேற்ற அரசு வெற்றி பெற்றுள்ளதாக விவசாய, நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளத்துறை அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.…

25% அமெரிக்கர்கள் மட்டுமே ஈரான் போருக்கு ஆதரவு

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்க மக்கள் 27 வீதத்தினர் மட்டுமே அங்கீகரித்து, 43 சதவீதத்தினர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். (Reuters/Ipsos) நடத்திய இந்த ஆய்வில், நான்கில் ஒரு அமெரிக்கர் மட்டுமே இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.…

ஈரான் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு தெஹ்ரானின் ‘நர்மக்’ பகுதியில்…

மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மீண்டும் QR அறிமுகம்

மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர்  முஹம்மது அர்க்காம் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இலங்கையில்…

இன்று முதல் நாளாந்தம் 40,000 லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

இன்று முதல் நாளாந்தம் 35,000 முதல் 40,000 ஆயிரம் வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லாஃப்ஸ்   நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு 24 மணி நேரமும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து

வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும்…

கமேனியும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டது எப்படி..?

  முடிவெடுக்கும் செயல்முறையை நன்கு அறிந்த அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில், முக்கிய ஈரானிய தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப தாக்குதல் சூழ்நிலையின் விவரங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு சற்று முன்பு, சிஐஏ அதன் முதன்மை இலக்கான,…

போர் பதற்றம் – வெளிநாட்டு பயணிகளுக்கு 07 நாட்கள் இலவச விசா நீடிப்பு

மத்திய கிழக்கில்  போர் பதற்றம் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  அரசாங்கம் ஏழு நாட்கள் இலவச விசா நீடிப்பை அறிவித்துள்ளது. விமானங்கள் தடைபட்டாலோ அல்லது இரத்து செய்யப்பட்டாலோ இலங்கையில் தங்கியிருக்கும் போது…

மத்திய கிழக்கில் போர் நிலையை நிறைவுக்கு கொண்டுவர இலங்கை அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலையை நிறைவுக்கு கொண்டு வந்து உடனடியாக அமைதியான நிலையை ஏற்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. இது…

29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்களால் 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன. க டந்த 14 ஆம் திகதி தொடக்கம் வடக்கு…