இனியபாரதி கையாண்டதாக கருதப்படும் மனிதப் புதைகுழியை தேடும் பணி ஆரம்பம்!

திருக்கோயில் காவற்துறைப்  பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்  புதை குழி தோண்டும் நடவடிக்கை சிஐடியினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (31.07.25)  அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன…

ஜே.வி.பி.யின் செயற்பாட்டை கண்டிக்கிறார் சஜித்

அரசாங்கமும் ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளும் நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளனத்தையும் பூரணமாக அரசியல்மயமாக்கி வருகின்றனர். இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளன பிரதேச சம்மேளனங்களையும் மக்கள் விடுதலை முன்னணியின்…

கண்டி எசல பெரஹெரா: ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு தடை!

வரலாற்று சிறப்பு மிக்க கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகையின் 2025 எசல பெரஹெராவில் ட்ரோன்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) தெரிவித்துள்ளது. அதன்படி, பெரஹெரா ஊர்வல வழிகளில் அனைத்து ட்ரோன் நடவடிக்கைகளும் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக CAASL…

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி,…

யாழ் விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்தவர் உயிரிழப்பு

3   யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து , அச்சுவேலிப்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் மரணம்!

மருதானையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், லொறி ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மருதானை பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவரது கணவர் நாவலப்பிட்டி மாவட்ட…

ஜனாதிபதி நாடு திரும்பினார் – LNW Tamil

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அந்நாட்டின்…

நாமல் ராஜபக்சவிற்கு நேரம் சரியில்லையா…?

நாமல் ராஜபக்சவிற்கு நேரம் சரியில்லையா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நெல்சன் மண்டேலாவை19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தார்கள். அவர் தென்னாபிரிக்க நாட்டின் ஜனாதிபதியானார் என்பதை மறக்க வேண்டாம். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க மேற்கண்டவாறு…

எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி

எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில், இலங்கையர்களாக நாங்கள் மகிழ்ச்சியடைவோம் நன்றி

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல்…