எங்கள் எண்ணங்கள் ஈரானிய மக்களுடன் உள்ளன என்பதையும் நினைவில் கொள்க – விஜித ஹேரத்

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இன்று (4) நான் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது காலத்தில் எங்கள் இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்தன.  இலங்கை இன்னும் ஈரானின் நட்பை மதிக்கிறது…

போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளது

1 மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை   இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு  விற்க வேண்டாம் எனவும்,  உலர வைக்கும் இயந்திரங்களை  பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறு அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை…

இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு…

அம்பாறை மாவட்ட விவசாயிகள் உரிய விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை

கிழக்கு மாகானத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மகா போக நெல் அறுவடை செய்யும் காலத்தில் சீரற்ற காலநிலையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நெல்லை தனியார்களுக்கு விற்பனை செய்யும் போது குறைந்த விலையில் பெற்றதனால் ஏழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.  எனவே…

இலங்கை கடற் பரப்பில் ஈரானிய கப்பலுக்கு நடந்தது என்ன?

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆரம்பித்துள்ளன.…

காலி கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் விபத்து: மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!

13 காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் சிகிச்சைக்காகக் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பல் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 40…

முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 7.30 மணியளவில் 119 அவசர எண்ணுக்குக் கிடைத்த தகவலின்…

துமிந்த சில்வா மீது லஞ்ச ஊழல் வழக்கு

சட்டவிரோத சொத்துக்களை குவித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவானுக்கு பிணை வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தாக்கல் செய்யப்பட்ட புகாரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவை சந்தேக…

இலங்கையின் மொத்த கடன் தொகை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையின் மத்திய அரசின் மொத்த கடன் தொகை ரூபாய் 31,109 பில்லியன் என பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு இறுதியில் இருந்த அளவுடன் ஒப்பிடுகையில் 5.1% அதிகரிப்பாகும். இந்த தொகையில் உள்ளூர் ஆட்சி நிறுவனங்கள்…