இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், புதன்கிழமை (20) நடைபெறவிருக்கும் தங்களது தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை (19) ரோமில் இரவு உணவு சந்திப்பு, கார் பயணம் மற்றும் புகழ்பெற்ற கொலோசியத்தைப் பார்வையிட்டது உள்ளிட்ட இயல்பான தருணங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இரு தலைவர்களும் தங்களது சந்திப்புகளின் சில காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர். 

தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக செவ்வாய்க்கிழமை இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடியை மெலோனி வரவேற்றார்.

இந்தியப் பிரதமருக்கு அன்பான வரவேற்பு அளித்த மெலோனி, கொலோசியத்தில் அவருடன் எடுத்த செல்ஃபியைப் பதிவிட்டு, “ரோமுக்கு வருக, என் நண்பரே” என்று எழுதியிருந்தார். 

இதற்கிடையில், பிரதமர் மோடி, தங்களது சுருக்கமான உரையாடல்கள் மற்றும் இத்தாலியத் தலைநகர் வழியாக மேற்கொண்ட கார் பயணத்தின் புகைப்படங்கள் உட்பட, தனது பயணத்தின் பல படங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் பயணத்தின் பிரதமர் மோசடி, இந்தியா-இத்தாலி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்காக, பிரதமர் மெலோனியுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதோடு, இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிலும் பங்கேற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இத்தாலிக்கான முதல் இருதரப்புப் பயணம் இதுவாகும்.

Image

Image

Image

 

 

 

 

நன்றி

Leave a Reply