69
பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை விட்டு விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் (Home Secretary) ஷபானா மஹ்மூத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிற் கட்சி (Labour Party) சந்தித்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, தலைமை மாற்றத்தைக் கோரி கட்சிக்குள் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.
சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் பதவி விலகலைக் கோரியுள்ள நிலையில், அமைச்சரவைக்குள்ளும் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், தான் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும், சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளப் போவதாகவும் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (12.05.26) காலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
